< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்து அணியில் மாற்று வீரராக கைல் ஜாமிசனுக்கு அழைப்பு

image courtesy; AFP

கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்து அணியில் மாற்று வீரராக கைல் ஜாமிசனுக்கு அழைப்பு

தினத்தந்தி
|
3 Nov 2023 8:50 AM IST

உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் நாளை மோத உள்ளது.

புது டெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. இதில் இந்திய அணி மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இதில் பங்கேற்றுள்ள நியூசிலாந்து அணி 7 ஆட்டங்களில் விளையாடு 4 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேற அந்த அணி மற்ற ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. நியூசிலாந்து தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் நாளை மோத உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு மேலும் நெருக்கடியாக சில முக்கிய வீரர்கள் காயத்தில் சிக்கியுள்ளனர். வில்லியம்சன், சாப்மேன், வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம், லோக்கி பெர்குசன் ஆகியோர் காயத்தில் சிக்கியுள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக நியூசிலாந்து அணிக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் அழைக்கப்பட்டு இருக்கிறார். அவர் விரைவில் அணியினருடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்