< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்

லைவ்; உலக கோப்பை கிரிக்கெட்: ரோகித் அதிரடி ஆட்டம்...பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

தினத்தந்தி
|
14 Oct 2023 2:35 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.


Live Updates

  • 14 Oct 2023 9:14 PM IST

    ஹமாஸ் அமைப்பினர் மூத்த கமாண்டர் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் வான்வழி செயல்பாடுகளுக்கு தலைவராக இருந்த முரத் அபு முரத் என்பவர், போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

  • 14 Oct 2023 8:13 PM IST



  • 14 Oct 2023 8:07 PM IST

    ரோகித் அதிரடி ஆட்டம்...பாகிஸ்தானை பந்தாடியது இந்திய அணி

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்க் செய்த பாகிஸ்தான் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்க் செய்த இந்திய அணி அதிரடி காட்டியது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 192 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

  • 14 Oct 2023 7:34 PM IST



  • 14 Oct 2023 7:33 PM IST

    சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 86 ரன்களில் ஆட்டமிழந்தார். 63 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 86 ரன்கள் அடித்து இருந்த ரோகித் சர்மா, ஷாகின் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். 

  • 14 Oct 2023 7:00 PM IST

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். இந்திய அணி 14 ஓவர்கள் நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் ஐயர் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  • 14 Oct 2023 6:44 PM IST

    இந்திய அணி நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 16 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஹசன் அலி வீசிய பந்தில் முகம்மது நவாஸிடம் கேட்ச் கொடுத்து விராட் கோலி வெளியேறினார்.

  • 14 Oct 2023 6:38 PM IST

    சிக்சர் மழை பொழியும் ரோகித்

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பொறுப்பாக ஆடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடி காட்டி வருகிறார். 9 ஓவர்கள் நிலவரப்படி இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்துள்ளார்.


  • 14 Oct 2023 6:31 PM IST

    இந்திய அணி 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 31 ரன்களுடனும் விராட் கோலி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்