உலகக்கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் பென் ஸ்டோக்ஸ்...?
|உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து - வங்காளதேச அணிகள் நாளை தர்மசாலாவில் மோத உள்ளன.
தர்மசாலா,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் நாளை இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறன. காலை 10.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்காளதேசம் அணிகள் தர்மசாலாவில் மோத உள்ளன. இங்கிலாந்து தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியும், வங்காளதேச அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றியும் பெற்றுள்ளன.
இங்கிலாந்து நாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ய ஆவலாக உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறும் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.பென் ஸ்டோக்ஸ் ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.