< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை கிரிக்கெட்; ஒரு இடத்திற்கு போட்டி போடும் 4 அணிகள்!
கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்; ஒரு இடத்திற்கு போட்டி போடும் 4 அணிகள்!

தினத்தந்தி
|
8 Nov 2023 10:54 AM IST

உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

புது டெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற உள்ள வாய்ப்புகள் பின்வருமாறு;-

1. நெதர்லாந்து; இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் நெதர்லாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும். ஒருவேளை நெதர்லாந்து வெற்றி பெற்றால், கடைசி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்த வேண்டும். அதிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், இந்தியாவையும் வீழ்த்த வேண்டும். எனவே நெதர்லாந்துக்கு அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு குறைவு. இந்த அணிக்கு உள்ள ஒரே பிளஸ் பாயிண்ட் நெட் ரன் ரேட்டில் மற்ற அணிகளை விட வலுவாக உள்ளது.

2. நியூசிலாந்து; நியூசிலாந்து நாளை இலங்கையை எதிர்கொள்கிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை தோல்வியடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

3.ஆப்கானிஸ்தான்; ஆப்கானிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். தோல்வி அடைந்தால் அரையிறுதிக்கு செல்ல முடியாது.

4. பாகிஸ்தான்; பாகிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இதில் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு செல்ல முடியும். தோல்வி அடைந்தால் அரையிறுதிக்குள் செல்ல வாய்ப்பு குறைவு. ஏனெனில் மற்ற அணிகளை விட நியூசிலாந்து அதிக ரன் ரேட்டினை கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்