< Back
கிரிக்கெட்
ஐபிஎல் ஆரம்ப கட்ட போட்டியில் பந்துவீச மாட்டேனா?: கேமரூன் கிரீன் விளக்கம்

Image Courtesy : AFP  

கிரிக்கெட்

ஐபிஎல் ஆரம்ப கட்ட போட்டியில் பந்துவீச மாட்டேனா?: கேமரூன் கிரீன் விளக்கம்

தினத்தந்தி
|
5 Jan 2023 5:06 PM IST

எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் தொடக்க கட்டத்தில் கேமரூன் கிரீன் பந்து வீசமாட்டார் என்று செய்திகள் வெளியானது.

மும்பை,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இன்னும் சில மாதங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி தங்களது அணியை பலப்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இம்முறை சில குறிப்பிட்ட வீரர்களை வாங்கி அந்த அணியை மேலும் பலப்படுத்தியது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை 17.50 கோடிக்கு விலைக்கு வாங்கி அவரை தங்களது அணிக்குள் கொண்டு வந்தது.

இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் தொடக்க கட்டத்தில் கேமரூன் கிரீன் பந்து வீசமாட்டார் என்று செய்திகள் வெளியானது. இதனை கேம்ரூன் கிரீன் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ;

இந்தச் செய்திகள் தவறானவை.சமீபகாலமாக இப்படியொரு செய்தி பரவி வருவதை நானும் கவனித்தேன். எங்கிருந்து தகவல் கிடைத்தது என தெரியவில்லை. ஐபிஎல் தொடங்கும் முன்பு 100 சதவீதம் முழு உடற்தகுதியுடன் இருப்பேன் என்றார்.

மேலும் செய்திகள்