< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு...!
|21 Dec 2023 10:29 AM IST
இந்திய அணி தரப்பில் ரிச்சா கோஷ் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்
மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் ரிச்சா கோஷ் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 56 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.