< Back
கிரிக்கெட்
மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

Image Courtesy:@ICC

கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
20 Sept 2024 1:40 PM IST

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த தொடரை முன்னிட்டு 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.

இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சமாரி அத்தபத்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி விவரம்; சமாரி அத்தபத்து (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவானி, ஹர்ஷிதா மாதவி, நிலக்ஷிகா டி சில்வா, இனோகா ரனவீரா, ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, சச்சினி நிசான்சலா, விஷ்மி குனரத்னே, உதேஷிகா பிரமோதனி, அச்சினி குலாசூரியா, சுகண்டிகா குமாரி, இனோஷி பிரியதர்ஷினி, ஷாஷினி கிம்ஹானி, அமா காஞ்சானா.

மேலும் செய்திகள்