மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் தகுதி
|மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.
துபாய்,
9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது.
இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இதற்கான தகுதி சுற்று போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஸ்காட்லாந்து, அயர்லாந்து, இலங்கை மற்றும் யு.ஏ.இ. அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
அரையிறுதியில் அயர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்தும், யு.ஏ.இ. அணியை வீழ்த்தி இலங்கை அணியும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
இதனிடையே இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.