< Back
கிரிக்கெட்
பெண்கள் டி20 உலகக் கோப்பை - இங்கிலாந்து அணிக்கு 110 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஸ்காட்லாந்து
கிரிக்கெட்

பெண்கள் டி20 உலகக் கோப்பை - இங்கிலாந்து அணிக்கு 110 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஸ்காட்லாந்து

தினத்தந்தி
|
13 Oct 2024 5:01 PM IST

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஸ்காட்லாந்து அணி 109 ரன்கள் எடுத்தது

சார்ஜா,

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், மாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கேத்ரின் பிரைஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கம் முதல் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஸ்காட்லாந்து அணி 109 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணியில் கேத்ரின் பிரைஸ் 33 ரன்களும் , சாரா பிரைஸ் 27 ரன்களும் எடுத்தனர் .இங்கிலாந்து அணியில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 110 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடுகிறது.

மேலும் செய்திகள்