< Back
கிரிக்கெட்
பெண்கள் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று; அயர்லாந்து அணி அறிவிப்பு

image courtesy; @ICC

கிரிக்கெட்

பெண்கள் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று; அயர்லாந்து அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
21 March 2024 4:24 AM IST

10 அணிகள் கலந்து கொள்ளும் பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது.

டப்ளின்,

10 அணிகள் கலந்து கொள்ளும் பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் ஆறு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

வங்காளதேசம் அணி தொடரை நடத்தும் நாடு என்பதால் நேரடியாக தகுதி பெற்றது. மேலும் ஐ.சி.சி. தரவரிசையின் அடிப்படையில் பாகிஸ்தான் அணியும் நேரடியாக தகுதி பெற்றது. இந்நிலையில் மீதமுள்ள 2 இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்ய உலகளாவிய தகுதி சுற்று போட்டிகள் அடுத்த மாதம் அபுதாபியில் நடைபெறுகிறது.

இந்த உலகளாவிய தகுதிசுற்று தொடரில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, இலங்கை, தாய்லாந்து, உகாண்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, வனுவாட்டு மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ளன. இதையடுத்து தகுதிசுற்று தொடரில் ஆட உள்ள நாடுகள் தங்களை அணிகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது அயர்லாந்து அணி தகுதிசுற்று தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு லாரா டெலானி கேப்டனாகவும், எட் ஜாய்ஸின் தலைமை பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அயர்லாந்து அணி விவரம்; லாரா டெலானி (கேப்டன்), அவா கேனிங், அலனா டால்செல், ஜார்ஜினா டெம்ப்சே, ஏமி ஹண்டர், அர்லீன் கெல்லி, கேபி லூயிஸ், லூயிஸ் லிட்டில், ஜோனா லௌரன், ஜேன் மாகுவேர், காரா முர்ரே, லியா பால், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், எமியர் ரிச்சர்ட்சன், ரெபேக்கா ஸ்டோக்ல்.

மேலும் செய்திகள்