பெண்கள் டி20 உலகக் கோப்பை: இலங்கை அணிக்கு 117 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
|இலங்கை அணியில் உதேசிகா பிரபோதனி , சுகந்திகா குமாரி , சமரி அதபத்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்
சார்ஜா,
9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில் இன்று சார்ஜாவில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்கம் முதல் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . அந்த அணியில கேப்டன் பாத்திமா சனா 30 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் உதேசிகா பிரபோதனி , சுகந்திகா குமாரி , சமரி அதபத்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர் . தொடர்ந்து 117 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி விளையாடுகிறது .