< Back
கிரிக்கெட்
பெண்கள் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு...!

Image Courtesy: @ICC Twitter 

கிரிக்கெட்

பெண்கள் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு...!

தினத்தந்தி
|
6 Jan 2023 4:08 PM IST

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

பெண்கள் டி20 உலகக்கோப்பை அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்தப் 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் மோத உள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குருப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அற்விக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி ஹெதர் நைட் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து பெண்கள் அணி விவரம்:-

ஹெதர் நைட் (கேப்டன்), லாரன் பெல், மியா பொச்சியர், கேத்ரின் ப்ரண்ட், ஆலிஸ் கேப்சி, கேட் கிராஸ், ப்ரேயா டேவிஸ், சார்லி டீன், சோபியா டன்க்லி, சோபி எக்ஸ்லெஸ்டோன், சாரா க்ளென், ஆமி ஜோன்ஸ், நாட் ஸ்சிவர், லாரன் விண்ட்பீல்ட்-ஹில், டேனி வியாட்.

ரிசர்வ் பிளேயர்ஸ்:- இஸ்சி வோங், டேனி கிப்சன்.

மேலும் செய்திகள்