< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
மகளிர் டி20 கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா..? - 2வது போட்டியில் நாளை மோதல்..!
|8 Dec 2023 12:55 PM IST
முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
மும்பை,
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. கடந்த ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும்.
அதேவேளையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணி முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.