< Back
கிரிக்கெட்
மகளிர் டி20 கிரிக்கெட்: இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

Image Courtesy: @ProteasWomenCSA

கிரிக்கெட்

மகளிர் டி20 கிரிக்கெட்: இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
1 July 2024 5:28 PM IST

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 1 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 5, 7, 9ம் தேதிகளில் நடைபெறுகிறது. 3 டி20 போட்டிகளும் சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு லாரா வோல்வார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் க்ளோ ட்ரையோன் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி விவரம்: லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர், சினாலோ ஜாப்டா, மரிசான் கேப், அயபோங்கா காக்கா, மசபடா கிளாஸ், சுனே லூஸ், எலிஸ்-மாரி மார்க்ஸ், நோன்குலுலேகோ ம்லாபா, துமி செக்குகுனே, க்ளோ ட்ரையோன்.

மேலும் செய்திகள்