< Back
கிரிக்கெட்
மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

தினத்தந்தி
|
18 Sept 2024 9:36 PM IST

தென் ஆப்பிரிக்கா தரப்பில் சேகுகுனே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முல்தான்,

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி முல்தானில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக முனீபா அலி மற்றும் குல் பெரோசா ஆகியோர் களம் இறங்கினர். இதில் குல் பெரோசா 10 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து சித்ரா அமீன் களம் இறங்கினார். முனீபா அலி - சித்ரா அமீன் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் முனீபா அலி 45 ரன்னிலும், சித்ரா அமீன் 28 ரன்னிலும், அடுத்து வந்த நிதா தார் 29 ரன்னிலும் அவுட் ஆகினர்.

தொடர்ந்து பாதிமா சனா மற்றும் அலியா ரியாஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இறுதியில் பாகிஸ்தான் 20 ஒவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் சேகுகுனே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி பெறுவதோடு தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி ஆடி வருகிறது.

மேலும் செய்திகள்