< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி
|10 Dec 2022 3:06 AM IST
முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது.
நவிமும்பை,
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் நவிமும்பையில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா தலா 36 ரன்களும், மந்தனா 28 ரன்களும் எடுத்தனர்.அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெத் மூனி 89 ரன்களுடனும் (57 பந்து, 16 பவுண்டரி), தாலியா மெக்ராத் 40 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.