< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்; முதல் வெற்றியை பதிவு செய்யுமா குஜராத் - டெல்லியுடன் இன்று மோதல்

Image Courtesy: @Giant_Cricket / @DelhiCapitals

கிரிக்கெட்

பெண்கள் பிரீமியர் லீக்; முதல் வெற்றியை பதிவு செய்யுமா குஜராத் - டெல்லியுடன் இன்று மோதல்

தினத்தந்தி
|
3 March 2024 6:14 AM IST

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.

பெங்களூரு,

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 1 தோல்வி கண்டு 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 3 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் அணி அனைத்திலும் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

குஜராத் அணி இன்று நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் உள்ளது. அதேவேளையில் டெல்லி அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்