< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்; பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பந்துவீச்சு தேர்வு

image courtesy; twitter/@wplt20

கிரிக்கெட்

பெண்கள் பிரீமியர் லீக்; பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
4 March 2024 7:11 PM IST

பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு,

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ள பெங்களூரு அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.

அதேவேளையில் தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள வாரியர்ஸ் அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் உள்ளது. இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்