< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரிமீயர் லீக்: டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பேட்டிங் தேர்வு..!

Image Courtesy: Twitter 

கிரிக்கெட்

பெண்கள் பிரிமீயர் லீக்: டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பேட்டிங் தேர்வு..!

தினத்தந்தி
|
12 March 2023 7:09 PM IST

பெண்கள் பிரிமீயர் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் மும்பை-உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் பெண்கள் பிரிமீயர் லீக்கின் இன்று நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் மும்பை-உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. தோல்வியை சந்திக்காத மும்பை அணி அதே வெற்றிப்பயணத்தை தொடர முனைப்பு காட்டும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு செய்துள்ளது.


மேலும் செய்திகள்