< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத் அணியை வீழ்த்தி உ.பி.வாரியர்ஸ் அபார வெற்றி
|1 March 2024 10:51 PM IST
5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.
பெங்களூரு,
5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் போப் லிட்ச்பீல்ட் 35 ரன்னும், கார்ட்னெர் 30 ரன்னும் எடுத்தனர். வாரியர்ஸ் அணி தரப்பில் எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வாரியர்ஸ் அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 143 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. வாரியர்ஸ் அணி தரப்பில் கிரேஸ் ஹாரிஸ் 60 ரன்கள் அடித்தார்.