< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்: பெங்களூரு அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்...!
|18 Feb 2023 4:54 PM IST
பெண்கள் பிரீமியர் லீக் போட்டிக்கான வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது.
மும்பை,
பெண்கள் பிரீமியர் லீக் போட்டிக்கான வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 87 பேர் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த தொடர் மார்ச் 4-ந் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது.
பெண்கள் பிரீமியர் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்கு தேர்வானார். அவரை ரூ.3.4 கோடிக்கு ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை ஆர்சிபி ஆடவர் அணியின் கேப்டன் பாப் டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இந்த தகவலை வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார்கள்.
இந்திய அணிக்கு 11 டி20 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்ட மந்தனாவுக்கு 6 போட்டிகளில் வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.