< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்; ரிச்சா கோஷ், மேகனா அரைசதம் - பெங்களூரு 157 ரன்கள் குவிப்பு

Image Courtesy: @wplt20

கிரிக்கெட்

பெண்கள் பிரீமியர் லீக்; ரிச்சா கோஷ், மேகனா அரைசதம் - பெங்களூரு 157 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
24 Feb 2024 9:02 PM IST

பெங்களூரு தரப்பில் ரிச்சா கோஷ் 62 ரன், மேகனா 53 ரன் எடுத்தனர்.

பெங்களூரு,

பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற தொடக்க லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெற்று வரும் 2வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உ.பி. வாரியர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சோபி டெவைன் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் சோபி டெவைன் 1 ரன்னிலும், மந்தனா 13 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மேகனா மற்றும் எல்லிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தனர். இதில் எல்லிஸ் பெர்ரி 8 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து மேகனாவுடன் ரிச்சா கோஷ் இணைந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.,

அதிரடியாக ஆடிய இவர்கள் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் மேகனா 53 ரன்னிலும், ரிச்சா கோஷ் 62 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த ஜார்ஜியா வேர்ஹாம் டக் அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு தரப்பில் ரிச்சா கோஷ் 62 ரன், மேகனா 53 ரன் எடுத்தனர். உ.பி.வாரியர்ஸ் தரப்பில் ராஜேஸ்வரி கயக்வாட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி.வாரியர்ஸ் அணி ஆட உள்ளது.

மேலும் செய்திகள்