< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு
|25 Feb 2024 7:06 PM IST
பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) தொடரின் 2வது சீசன் கடந்த 23ம் தேதி பெங்களூருவில் தொடங்கியது.
பெங்களூரு,
பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) தொடரின் 2வது சீசன் கடந்த 23ம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 2 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் கடைசி பந்தில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் குஜராத் அணிக்கு இது முதல் லீக் ஆட்டமாகும்.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.