< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @wplt20

கிரிக்கெட்

பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
9 March 2024 7:52 AM IST

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் மும்பை அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 5 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் அணி 1 வெற்றி, 4 தோல்வி கண்டு 2 புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே மோதிய லீக் ஆட்டத்தில் மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஏற்கனவே மும்பை அணியிடன் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க குஜராத் கடுமையாக முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்