< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @wplt20

கிரிக்கெட்

பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
5 March 2024 12:32 AM GMT

பெங்களூருவில் 11 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் லீக் ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற உள்ளன.

பெங்களூரு,

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வந்தது. பெங்களூருவில் 11 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் லீக் ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் டெல்லியில் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா 4 லீக் ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன.

புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்