< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்: வெளியேற்றுதல் சுற்று - மும்பை அணிக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு
கிரிக்கெட்

பெண்கள் பிரீமியர் லீக்: வெளியேற்றுதல் சுற்று - மும்பை அணிக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு

தினத்தந்தி
|
15 March 2024 9:11 PM IST

பெங்களூரு அணியில் எல்லிஸ் பெர்ரி சிறப்பாக ஆடி 66 ரன்களில் ஆட்டமிழந்தார் .

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கடைசி இரு இடத்துக்கு தள்ளப்பட்ட உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெளியேறின.2-வது, 3-வது இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் வெளியேற்றுதல் சுற்றில் இன்று மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி , பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்தில் பெங்களூரு அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் . அந்த அணியில் ஸ்மிருதி மந்தனா 10 , சோபி டெவின் 10 ,ரிச்சா கோஷ் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பெங்களூரு அணியில் எல்லிஸ் பெர்ரி மட்டும் சிறப்பாக ஆடினார் . அரைசதமடித்த அவர் 66 ரன்களில் ஆட்டமிழந்தார் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 135 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 136 ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடுகிறது.

மேலும் செய்திகள்