< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்
கிரிக்கெட்

பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்

தினத்தந்தி
|
9 March 2024 9:20 PM IST

தயாளன் ஹேமலதா 74 ரன்கள் ,பெத் மூனி 66 ரன்கள் எடுத்தனர்.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் குஜராத் அணி வீராங்கனைகள் அதிரடி காட்டினர் . பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.

இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.. அந்த அணியில் அதிகபட்சமாக தயாளன் ஹேமலதா 74 ரன்கள் ,பெத் மூனி 66 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து 191 ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்