< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத் ஜெயன்ட்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்
|11 March 2024 7:20 AM IST
2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
புதுடெல்லி,
2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் வாரியர்ஸ் அணி 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 4 தோல்வி கண்டு 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
அதேவேளையில் 6 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் அணி 1 வெற்றி 5 தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.