< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரிமீயர் லீக்: பெங்களூரு அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியுமா...அதற்கான வாய்ப்புகள் என்னென்ன..?

Image Courtesy: @wplt20

கிரிக்கெட்

பெண்கள் பிரிமீயர் லீக்: பெங்களூரு அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியுமா...அதற்கான வாய்ப்புகள் என்னென்ன..?

தினத்தந்தி
|
20 March 2023 4:11 PM IST

பெண்கள் பிரிமீயர் லீக்கின் (பிளே-ஆப்) அடுத்த சுற்றுக்கு மும்பை, டெல்லி அணிகள் தகுதி பெற்று விட்டன.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெய்ண்ட்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும். இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்களை பொறுத்தவரையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இதில் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதி உள்ள அணியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடிய முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த தொடர் தோல்விகளால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியானது.

ஆனால் 5 தொடர் தோல்விகளுக்கு பின் தங்களது 6வது மற்றும் 7வது லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது. இந்நிலையில் பிளே ஆப் சுற்றில் எஞ்சியுள்ள ஒரு இடத்துக்கு பெங்களூரு அணி செல்வதற்கான உள்ள வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.

* முதலாவதாக அந்த அணி தங்களுக்கு எஞ்சியுள்ள ஒரு லீக் ஆட்டம் (மும்பைக்கு எதிராக) மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

* பெங்களூரு அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் உ.பி.வாரியர்ஸ் அணி தங்களுக்கு எஞ்சியுள்ள 2 லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைய வேண்டும்.

* தற்போது நடைபெற்று வரும் உ.பி.வாரியர்ஸ் - குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் குஜராத் அணி வெல்ல வேண்டும். அதேவேளையில் குஜராத் அணி உ.பி.வாரியர்ஸை மிகப் பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த கூடாது. அவ்வாறு வீழ்த்தினார். குஜராத் அணி ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரை விட முன்னேறி விடும்.

இவ்வாறு மேற்கண்ட நிகழ்வுகள் நடந்தால் பெங்களூரு அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.


மேலும் செய்திகள்