< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்: பெத் மூனி அதிரடி.. பெங்களூருவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த குஜராத்

image courtesy: twitter/@wplt20

கிரிக்கெட்

பெண்கள் பிரீமியர் லீக்: பெத் மூனி அதிரடி.. பெங்களூருவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த குஜராத்

தினத்தந்தி
|
6 March 2024 9:23 PM IST

குஜராத் அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 85 ரன்கள் குவித்து அசத்தினார்.

புதுடெல்லி,

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பெத் மூனி - லாரா வோல்வார்ட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இவர்களை தவிர அந்த அணியில் யாரும் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 85 ரன்களும், லாரா வோல்வார்ட் 76 ரன்களும் குவித்தனர். பெங்களூரு அணி சோபி மோலினியூ மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களூரு பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்