மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 282 ரன்கள் குவித்த இந்தியா..!
|இந்திய அணி தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 82 ரன்கள் அடித்தார்.
மும்பை,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமானது. இதன் முதலாவது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் பந்துவீச்சை சிறப்பாக விளையாடி ரன்களை சேகரித்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 82 ரன்கள் அடித்தார். இறுதி கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடிய பூஜா வஸ்த்ரகர் 46 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.