பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார பந்துவீச்சு - தென் ஆப்பிரிக்கா 215 ரன்கள் சேர்ப்பு
|இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது.
பெங்களூரு,
இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 143 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்த நிலையில் லாரா வோல்வார்ட் 61 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய மரிசான் கேப் 7 ரன், அன்னேக் போஷ் 5 ரன், சுனே லூஸ் 13 ரன், நாடின் டி கிளார்க் 26 ரன், நொந்துமிசோ ஷங்கசே 16 ரன், நோன்குலுலேகோ லபா 0 ரன் எடுத்த நிலையிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாஸ்மின் பிரிட்ஸ் 38 ரன் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் தீப்தி ஷர்மா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட உள்ளது.