< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி
|22 Jan 2023 1:02 AM IST
முதலில் பேட் செய்த இந்தியா 18.5 ஓவர்களில் 87 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
போட்செப்ஸ்ட்ரூம்,
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
2-வது சுற்றில் 12 அணிகள் சூப்பர்சிக்ஸ் என்ற அடிப்படையில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. சூப்பர் சிக்சில் தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை நேற்று எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 18.5 ஓவர்களில் 87 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக சுவேதா செராவத் 21 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷபாலி வர்மா 8 ரன்னில் கேட்ச்சாகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 13.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.