< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியை வாங்க இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு
|4 Jan 2023 2:54 AM IST
டெண்டர் விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி வருகிற 21-ந்தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.
புதுடெல்லி,
முதலாவது பெண்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை மார்ச் 3-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளை வாங்குவதற்கு விரும்பும் நிறுவனங்கள் உரிமை கோரலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்து டெண்டர் விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது.
டெண்டர் விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி வருகிற 21-ந்தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த தொகை திருப்பி வழங்கப்படமாட்டாது. விரும்பும் நிறுவனங்கள் உரிய விதிமுறைக்கு உட்பட்டு டெண்டர் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும்படி கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.