< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஒரே மாநிலத்தில் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா
|11 Dec 2023 11:44 AM IST
டபிள்யூ.பி.எல். தொடரின் 2-வது சீசன் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி 2 அல்லது 3-வது வாரத்தில் தொடங்கும்.
மும்பை,
பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் (டபிள்யூ.பி.எல்.) கடந்த மார்ச் மாதம் மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இந்நிலையில் 2-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடரும் ஒரே மாநிலத்திலேயே நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்;- '2-வது டபிள்யூ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி 2-வது அல்லது 3-வது வாரத்தில் தொடங்கும். நடைமுறை சிக்கல் காரணமாக இந்த முறையும் ஒரே மாநிலத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அல்லது உத்தரபிரதேசத்தில் நடத்தப்படலாம். மேலும் சில இடங்களும் பரிசீலனையில் உள்ளன. இந்த தொடர் 2025-ல் பல்வேறு இடங்களில் நடத்தப்படும்' என்று கூறினார்.