< Back
கிரிக்கெட்
பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்: உ.பி. வாரியர்ஸ் அணியில் அத்தப்பட்டு சேர்ப்பு

கோப்புப்படம்

கிரிக்கெட்

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்: உ.பி. வாரியர்ஸ் அணியில் அத்தப்பட்டு சேர்ப்பு

தினத்தந்தி
|
27 Jan 2024 6:34 AM IST

5 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது.

மும்பை,

5 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 23-ந் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான உ.பி. வாரியர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாரன் பெல் இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டுவை அடிப்படை விலைக்கு (ரூ.30 லட்சம்) உ.பி. அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அட்டப்பட்டு சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 122 ஆட்டத்தில் விளையாடி ஒரு சதம், 8 அரைசதம் உள்பட 2,651 ரன் குவித்துள்ளார்.


மேலும் செய்திகள்