< Back
கிரிக்கெட்
பெண்கள் கிரிக்கெட்; ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா..? - கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்துடன் இன்று மோதல்..!

Image Courtesy : @BCCIWomen / @englandcricket

கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட்; ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா..? - கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்துடன் இன்று மோதல்..!

தினத்தந்தி
|
10 Dec 2023 10:24 AM IST

இதுவரை நடந்து முடிந்துள்ள 2 போட்டிகள் முடிவில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றிவிட்டது.

மும்பை,

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 2 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக போராடும்.

அதேவேளையில் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணி விளையாடும். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்