< Back
கிரிக்கெட்
மகளிர் ஆசிய கோப்பை: மலேசியா அணிக்கு 134 ரன்களை இலக்காக நிர்ணயித்த தாய்லாந்து

image courtesy:twitter/@ACCMedia1

கிரிக்கெட்

மகளிர் ஆசிய கோப்பை: மலேசியா அணிக்கு 134 ரன்களை இலக்காக நிர்ணயித்த தாய்லாந்து

தினத்தந்தி
|
20 July 2024 3:35 PM IST

தாய்லாந்து தரப்பில் அதிகபட்சமாக நன்னபட் 40 ரன்கள் அடித்தார்.

தம்புல்லா,

9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் பி பிரிவு ஆட்டத்தில் தாய்லாந்து - மலேசியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தாய்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தாய்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக நன்னபட் கொஞ்சரோஎங்கை 40 ரன்கள் அடித்தார். மலேசியா தரப்பில் அதிகபட்சமாக மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மலேசியா பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்