< Back
கிரிக்கெட்
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்தை இன்று சந்திக்கிறது இந்தியா
கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்தை இன்று சந்திக்கிறது இந்தியா

தினத்தந்தி
|
20 Feb 2023 3:15 AM IST

அரைஇறுதிக்கு தகுதி பெற இன்றைய ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

கியூபெர்தா

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீசை பதம் பார்த்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்தியா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று புள்ளி பட்டியலில் 4 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று (திங்கட்கிழமை) அயர்லாந்தை எதிர்கொள்கிறது. அரைஇறுதிக்கு தகுதி பெற இன்றைய ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால், இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி வரும்.

ஏற்கனவே 3 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட அயர்லாந்து ஆறுதல் வெற்றிக்காக போராடும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா- அயர்லாந்து அணிகள் இதற்கு முன்பு ஒரு முறை மோதியுள்ளன. 2018-ம் ஆண்டில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்