< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
|2 Feb 2023 6:11 AM IST
லண்டனில் இன்று நடக்கும் இறுதிஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
ஈஸ்ட் லண்டன்,
தென்ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் ஈஸ்ட் லண்டனில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் இறுதிஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.