< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா ஜிம்பாப்வே..? - 235 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த ஸ்காட்லாந்து...!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா ஜிம்பாப்வே..? - 235 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த ஸ்காட்லாந்து...!

தினத்தந்தி
|
4 July 2023 11:00 AM GMT

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஜிம்பாப்வே அணி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

புலவாயே,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்பேயில் நடைபெற்று வருகிறது.

இதில் இலங்கை அணி ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மீதமுள்ள 1 இடத்துக்கு ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து இன்று நடைபெற்று வரும் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகள் ஆடி வருகின்றன.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து தரப்பில் மைக்கேல் லீஸ்க் 48 ரன், மேத்யூ க்ராஸ் 38 ரன், பிரண்டன் மெக்முல்லன் 34 ரன்னும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே அணி தரப்பில் சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டும், சதாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆட உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஜிம்பாப்வே அணி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என்பதால் அந்த அணி வீரர்கள் பொறுப்புடன் இலக்கை விரட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்