< Back
கிரிக்கெட்
மீண்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு திரும்புவீர்களா..? - ரோகித் சர்மா பதில்
கிரிக்கெட்

மீண்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு திரும்புவீர்களா..? - ரோகித் சர்மா பதில்

தினத்தந்தி
|
19 Sept 2024 3:38 PM IST

டி20 உலகக்கோப்பையை வென்ற உடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பையை வென்றதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார். வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக அவர் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரோகித் சர்மாவிடம், டி20 கிரிக்கெட்டில் ஓய்வில் இருந்து வெளியேறி மீண்டும் விளையாட வாய்ப்புகள் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ரோகித் சர்மா, "சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு அறிவிப்பு என்பதே நகைச்சுவையாகிவிட்டது. சிலர் ஓய்வை அறிவித்துவிட்டு, திடீரென மீண்டும் விளையாட வந்துவிடுகிறார்கள். இந்தியாவில் அதுபோல் நடப்பதில்லை. ஆனால் மற்ற நாடுகளில் இதுபோன்று செயல்பட்டும் வீரர்களை கவனித்து வருகிறேன். ஓய்வை அறிவித்துவிட்டு உடனடியாக யூ-டர்ன் போடுகிறார்கள்.

அதனால் அந்த வீரர்கள் உண்மையாகவே ஓய்வு பெற்றுவிட்டார்களா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வை அறிவித்தது உண்மைதான். மீண்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பே கிடையாது. டி20 கிரிக்கெட்டில் இருந்து சரியான நேரத்தில் நான் ஓய்வை அறிவித்துவிட்டேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்