< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். கோப்பையை வென்று தர பெங்களூரு அணிக்கு வருவீர்களா? - ரசிகரின் கேள்விக்கு டோனி அளித்த பதில்

Image Courtesy: @ChennaiIPL

கிரிக்கெட்

ஐ.பி.எல். கோப்பையை வென்று தர பெங்களூரு அணிக்கு வருவீர்களா? - ரசிகரின் கேள்விக்கு டோனி அளித்த பதில்

தினத்தந்தி
|
22 Dec 2023 11:01 AM IST

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஐ.பி.எல். தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளாக மும்பை, சென்னை ( தலா 5 முறை ) அணிகள் திகழ்கின்றன.

ஆனால் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்னும் ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை வென்றதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பெங்களூரு அணியின் தீவிர ரசிகர் ஒருவர் டோனியிடம், 'நீங்கள் ஏன் பெங்களூரு அணிக்கு வந்து கோப்பையை வெல்ல உதவ கூடாது?" என்று கேள்வி கேட்டார். அதற்கு டோனி அளித்த பதிலில் கூறியதாவது,

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சிறந்த அணி. மேலும், கிரிக்கெட்டை பொறுத்தவரை உங்களுடைய திட்டத்தின்படி எல்லாம் சரியாக நடந்து விடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஐ.பி.எல். போட்டியில் இருக்கும் 10 அணிகளும் சிறந்த வீரர்களைத்தான் தேர்வு செய்கின்றன.

அனைத்து அணிகளும் வலுவாகவே உள்ளன. இருப்பினும், காயம் மற்றும் பிற சூழ்நிலை காரணமாக வீரர்கள் முழுமையாக விளையாட முடியாமல் போகும்போதுதான் சிக்கல் எழுகிறது. இதுவே அந்த அணியின் வெற்றி வாய்ப்பையும் குறைத்து விடுகிறது.

எனக்கு இப்போது எங்கள் அணியை (சென்னை) பற்றி கவலைப்பட நிறைய விஷயங்கள் உள்ளன. இதில் நான் எப்படி உங்கள் அணிக்கு உதவ முடியும். மேலும், நீங்கள் சொல்வதைபோல் செய்தால் எங்கள் அணியின் ரசிகர்கள் என்ன நினைப்பார்கள். எல்லா அணிகளும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்