இங்கிலாந்தின் அடுத்த சுற்று கனவுக்கு வானிலை வழிவிடுமா? மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
|மழை காரணமாக இங்கிலாந்து - நமீபியா இடையிலான ஆட்டத்தில் டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது.
டிரினிடாட்,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரு இடங்களுக்கு வங்காளதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 4 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் குரூப் சி-யில் குறிப்பாக இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இன்று நடைபெறும் தங்களது கடைசி போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் தற்போது மழை தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. மழை காரணமாக இங்கிலாந்து - நமீபியா இடையிலான ஆட்டத்தில் டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. மழை நின்று ஆட்டம் நடைபெற வேண்டும் என்பது தான் இங்கிலாந்து வீரர்களின் எண்ணமாக உள்ளது. அவர்களின் எண்ணம் ஈடேறுமா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.