< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
தோல்வியிலிருந்து மீளுமா இந்திய அணி ? - 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது
|1 Feb 2024 11:08 AM IST
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
அதே நேரத்தில் இந்த போட்டியிலும் வென்று வெற்றி பயணத்தை தொடர இங்கிலாந்து தீவிரம் காட்டும் .இந்த போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது .