< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்குமா இலங்கை..? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
|29 Aug 2024 8:25 AM IST
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
லண்டன்,
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணியளவில் தொடங்க உள்ளது.
முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடிய இலங்கை, 2-வது போட்டியில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.