< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பிளே ஆப் வாய்ப்பை உறுதிசெய்யுமா மும்பை..! டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
|21 May 2023 3:17 PM IST
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
மும்பை,
ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய ஐதராபாத்துக்கு எதிரான 69வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. ஐதராபாத் அணியை குறைந்த ரன்களில் சுருட்டி, பின்னர் அந்த இலக்கை விரைவாக எட்டுவதற்கு மும்பை அணி தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
அதே வேளையில், தனது கடைசி போட்டியை வெற்றியுடன் முடிக்க ஐதராபாத் அணி ஆர்வம் காட்டும். ஆகவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.