< Back
கிரிக்கெட்
தொடரை சமன் செய்யுமா இந்தியா? - கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையுடன் நாளை மோதல்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

தொடரை சமன் செய்யுமா இந்தியா? - கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கையுடன் நாளை மோதல்

தினத்தந்தி
|
6 Aug 2024 9:06 PM IST

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 1-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டி டை ஆனது. 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் நாளை நடக்கிறது.

இலங்கைக்கு எதிராக டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி ஒருநாள் தொடரில் இலங்கையின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதன் காரணமாக பல்வேறு விமர்சங்களை சந்தித்த இந்திய அணி தொடரை சமன் செய்ய நாளை நடைபெறும் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக போராடும். அதேவேளையில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்ற இலங்கை கடுமையாக முயற்சிக்கும். இதனால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்