< Back
கிரிக்கெட்
பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்குமா குஜராத்? பெங்களூரு அணியுடன் இன்று மோதல்
கிரிக்கெட்

பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்குமா குஜராத்? பெங்களூரு அணியுடன் இன்று மோதல்

தினத்தந்தி
|
4 May 2024 5:57 AM IST

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை இன்று எதிர்கொள்கிறது.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறும் 52-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

பெங்களூரு அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் ஊசலாடுகிறது. அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கும் பெங்களூரு அணி தனது எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைப்பதை நினைத்து பார்க்க முடியும். மாறாக ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான்.

முன்னாள் சாம்பியனான குஜராத் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. எஞ்சிய 4 ஆட்டங்களும் அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கலாம்.

அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நிலைக்க பெங்களூரு அணி தீவிரம் காட்டும். குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் எளிதாக வெற்றியை ருசித்ததும், உள்ளூர் சூழலும் அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும். அதேநேரத்தில் பெங்களூருவிடம் முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், அடுத்த சுற்று வாய்ப்பையும் தக்க வைத்து கொள்ள குஜராத் அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்த முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. அத்துடன் இந்த மைதானத்தில் பவுண்டரி தூரம் குறைவு என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி கண்டுள்ளன.

மேலும் செய்திகள்