< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்யுமா இங்கிலாந்து..? 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
|26 July 2024 7:45 AM IST
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
பர்மிங்காம்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இந்திய நேரப்படி இன்று மாலை 3 30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. அதேவேளை தொடரை இழந்து விட்டாலும் ஆறுதல் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.